Monday, December 5, 2011

ஹை-டெக் சிட்டி ஐதராபாத்தில் ஆட்டு பண்ணை அதிகரிப்பு

சாப்ட்வேர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் நாட்டின் முன்னணி தொழில்நுட்ப நகரான ஐதராபாத்தில் தற்போது ஆட்டு பண்ணைகள் அதிகரித்து வருகின்றன. ஆந்திராவின் ஐதராபாத் நகரில் பல்வேறு முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகளின் அபரிமிதமான வளர்ச்சியால் உயர் தொழில்நுட்பம் நிறைந்த நகராக உருவாகியுள்ளது. இந்நகரில் நிறுவனங்களின் பெருக்கத்தால் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பல ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி வருகின்றன. 

பூர்வீகமாக குடியிருந்து வரும் விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்காமல், அப்பகுதியில் ஆட்டு பண்ணைகளை அதிகமாக அமைத்து வருகின்றனர். ஐதராபாத்தில் சாப்ட்வேர் துறை வளர்ச்சியடைந்து வரும் அதேவேளையில் மாதாபூர் பகுதியில் தற்போது 30க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய ஆட்டு பண்ணைகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பண்ணைகள் அதிகரித்து வருகின்றன.

தொழில்நுட்ப வளர்ச்சியால் நகரம் விரிவடைந்து வருவதால் தங்களின் பூர்வீக பகுதிகளில் இருந்து வெளியேறவோ, நிலங்களை விற்கவோ மாட்டோம். தொன்று தொட்டு கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபடுவதால் வரும் காலத்தில் இங்கிருந்து வெளியேறுவது பற்றி யோசிக்கவில்லை என்று ஆட்டு பண்ணை உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார். இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக நிலங்களில் மதிப்பு ராக்கெட் வேகத் தில் உயர்ந்தாலும் நிலங் களை விற்க பெரும்பான்மையினர் முன்வரவில்லை.  சிலர் நிலங்களை விற்கவும் செய்கின்றனர். 

No comments:

Post a Comment