Monday, November 28, 2011

செம்மறி ஆடு வளர்ப்பு


செம்மறி ஆட்டினங்கள்
ராமநாதபுரம் வெள்ளைகீழக்கரிசல்நீலகிரிதிருச்சி கருங்குரும்பைமேச்சேரி,மெரினோ.
உள்ளூர் இனங்கள் - இது வெவ்வேறு இடத்தைப் பொறுத்து மாறும்
· மெரினோ - கம்பளிக்கு உகந்தது
· ராம்பெளலட் - கம்பளி மற்றும் கறிக்கு ஏற்றது.
· சோவியோட் - கறிக்கு ஏற்றது
· செளத் டான் - கறிக்கு ஏற்றது
நல்ல தரமான இன வகைகள்ஆட்டுத் தொழுவம் அமைப்பதுவளமான செம்மறி ஆடுகள் உற்பத்தி போன்றவற்றைப் பற்றி ஏதேனும் விபரம் தேவைப்பட்டால் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பு மையத்தையோ அல்லது வேளாண் அலுவலகத்தையோ அணுகவும்.


நிலம் அதிகமாக இருக்குமெனில்செம்மறி ஆடுகளை மேயவிட்டும்வீட்டில் தொழுவத்தில் பராமரித்தும் வளர்க்கலாம். வறட்சியான மற்றும் மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத்தில்செம்மறி ஆடு வளர்ப்பு ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. சிறு மற்றும் குறுநில விவசாயிகள்நிலமற்ற வேளாண் தொழிலாளிகள்குறைந்த முதலீடு செய்து நிறைய லாபம் பெறலாம்.
நன்மைகள்
· அனைத்து சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப்படியான பராமரிப்பு அவசியம் இல்லை.
· கறியின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது
· உரோமம் கம்பளி தயாரிக்கவும் மற்றும் கறி இறைச்சிக்காகவும் பயன்படுகிறது.
· சராசரியாக ஒவ்வொரு முறையும் 1-2 குட்டிகள் ஈனுகிறது.
·ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கிறது.
· எருவை சேர்த்து நிலத்தை வளமாக்குகிறது.

அறிவியல் ரீதியான ஆடு வளர்ப்பு


மேலும் ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க ஆர்வமுள்ள பண்ணையா ளர்கள் கீழ்க்காணும் சில முக்கிய விபரங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

* ஆட்டுப்பண்ணை தொடங்கும் பண்ணையாளரே அந்தப் பண் ணையின் முதல் வேலையாளாக இருக்க வேண்டும்.

* ஆட்டுப்பண்ணை தொடங்க முதலில் முறையான பயிற்சி அவசியம்.

* பசுந்தீவன உற்பத்தியில் முக்கிய கவனம் செலுத்தி அதிக அளவு பயறுவகை மற்றும் மரவகைப் பசுந்தீவனங்களைப் பயி ரிட வேண்டும்.

* உயர்ந்த இனக்கிடாய்களையும், பண்ணை முறையில் வளர்க் கப்பட்ட ஆடுகளையும் தேர்வு செய்து, வாங்கி, பண்ணையை தொடங்க வேண்டும்.

* நோய் தடுப்பு, குடற்புழு மற்றும் ஒட்டுண்ணிகள் நீக்கம் போன்ற பண்ணை நடைமுறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

* குட்டிகளில் இறப்பைத் தடுக்க, குட்டிகள் பராமரிப்பில் அதிக கவ னம் செலுத்த வேண்டும்.

* நாம் வளர்த்த ஆட்டின் மதிப்பைத் தெரிந்துகொண்டு இடைத் தரகர்கள் மற்றும் வியாபாரிகளிடம் ஏமாறாமல் உடல் எடைக்கு ஏற்ப ஆடுகளை விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.

மேற்காணும் வழிமுறைகளை கடைபிடித்து அறிவியல் ரீதியாக ஆடுகளை வளர்த்தால் வெற்றி நிச்சயம். 

Tuesday, November 8, 2011

வெள்ளாட்டு இனங்கள் – வெளிநாட்டினங்கள்


ஆல்பின் (Alpines) இவை பிரான்சு, சுவிட்சர்லாந்து, ஆல்ப் மலைப் பகுதிகளைச் சார்ந்தவை. பல்வேறு நிறம் கொண்டவை. கறுப்பு, செந்நிறம், வெள்ளை மற்றும் இந்நிறங்களின் கலவையான நிறங்களுடன் காணப்படும். கடா 65 முதல் 80 கிலோ எடை கொண்டது. பெட்டை ஆடு 50 முதல் 60 கிலோ எடை கொண்டது.
ஆங்கிலோ நுபியன் (Anglo – Nubian) ஆடுகளின் ஜெர்சி என இவற்றைக் குறிப்பிடலாம். ஏனெனில் இவற்றின் பால் 4 முதல் 5% கொழுப்புச் சத்துக் கொண்டது. இவ்வினம் இங்கிலாந்து நாட்டில் எகிப்து நாட்டு நுபியன் இனக் கடா மற்றும் இந்திய சமுனாபாரி பெட்டை ஆடுகளின் இனச் சேர்க்கையால் தோற்றுவிக்கப்பட்டது. இவை கறுப்பு, சிவப்பு, வெள்ளை மற்றும் இவை கலந்த நிறங்களுடன் காணப்படும். சமுனாபாரி போன்று ரோமானிய மூக்கும், நீண்ட தொங்கும் காதுகளும் கொண்டவை. ஆண், பெண் ஆடுகளுக்குக் கொம்புகள் உள்ளன. கிடாக்கள் 65 முதல் 80 கிலோ எடை கொண்டவை. பெட்டை ஆடுகள் 50 முதல் 60 கிலோ எடை கொண்டவை.
சாணன் (Saanan) இது சுவிஸ் நாட்டின் இனமாகும். இது வெள்ளை நிறமுடையது. ஆல்பின் இனத்தையொத்த உடல் எடையுள்ளது. இவ்வினத்தின் சில வகை ஆடுகளுக்குக் கொம்பு இருக்காது. சில வகைகளுக்குக் கொம்பு இருக்கும். கொம்பு இல்லாமை டாமினட் ஜீன் காரணமாக ஏற்படுவது ஆகும். ஆண், பெண் இரண்டிற்கும் தாடி இருக்கும். பால் அளவு 2 முதல் 5 கிலோ வரை, கொழுப்புச் சத்து 3 முதல் 4% வரை.
தோகன்பர்க் (Toggenburg) இது சுவிஸ் நாட்டில் தோன்றியதாயினும் அமெரிக்க நாட்டில் சிறப்புடன் வளர்க்கப்படுகின்றது. இது இளம் பழுப்பு நிறமுடையது. வயிறு, கால் பகுதிகள் வெள்ளை நிறத்துடன் இருக்கும். எடை மற்ற வெளிநாட்டு இனங்களைப் போன்றது. பால் அளவு தினம் 5 முதல் 6 கிலோ.
அங்கோரா (Angora) இது ஒரு கம்பளி இன வெள்ளாடு ஆகும். இவை மொகேர் (Mohair) வழங்குகின்றன. ஓர் ஆடு, ஆண்டில் 4, 6 பவுண்டு மொகேர் வழங்குகின்றன. இதன் மூலம் சிறந்த கம்பளிகளும் ஆடைகளும் தயாரிக்கப்படுகின்றன. அங்கோரா ஆடுகள் அதிக அளவில் அமெரிக்காவிலும், துருக்கியிலும் வளர்க்கப்படுகின்றன.
சீன நீல ஆடுகள் (Blue China Goat) சீனாவில் சான்தாங் மாநிலத்திலுள்ள நீல ஆடுகள் 6 அல்லது 7 குட்டிகள் ஒரே வேளையில் ஈனும் குணம் கொண்டவை.