Monday, June 6, 2011

பண்ணைக்காரன்



ஆடு இருவகைப்படும் , !) வெள்ளாடு 2)செம்மறியாடு
தமிழ் நாட்டில் காணப்படும் வெள்ளாட்டினங்கள்
கன்னி ஆடுகள், கொடிஆடுகள், சேலம்கறுப்பு, பள்ளையாடுகள்।
நம் நாட்டின் மற்ற இடங்களில் காணப்படும் மற்ற இனங்கள்:
ஜமூனாபாரி, பீட்டல், சரோகி, காஷ்மீரி, பார்பாரி, சுர்த்தி, ஓஸ்மானாபடி, தலைச்சேரி (மலபாரி), மார்வாரி, பாஸ்மினா, ஜக்ரனா, வங்காளக் கறுப்பு, சிரேஹி, ஜலவாடி, கோஹல்வாடி, மேசனா, ஆஸ்மானபடி, குட்சி, சங்கம்னரி, கட்டி, ஷேகு, சந்தங்கி முதலியன.
வெளிநாட்டி்ல் காணப்படும் இனங்கள்:
அங்கோரா, ஆலீபைன், ஆங்கிலோ நூபியன், போயர், சானன், டோகன்பர்க், சீன நீலம்,முதலியன।

1)கன்னி ஆடுகள்: இவை பெரும்பாலும் தென் மாவட்டங்களில் காணப்படுகின்றன।குறிப்பாக சிவகாசி, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், விளாத்திக்குளம், இராமநாதபுரம் பகுதிகளில் அதிகமாகவும், குறிப்பாக கரிசல் நிலம், குன்றுகள் நிறைந்த பகுதிகளில் நிறைவாக காணப்படுகின்றன। இந்த ஆட்டினத்தை இன காண்பது எளிது, முகத்தில் வெண்மை கோடு அல்லது செங்கோடு வயிற்று பகுதியில் வெண்மையாகவோ, அல்லது செந்நிறமாகவோ காணப்படும்। முகத்தில் வெண்மைக்கோடு கொண்டுள்ள ஆடு பால் கன்னி என்றும், செந்நிறக்கோடு கொண்டுள்ள ஆடு செங்கன்னி என்றும் அழைக்கப்படும்। கன்னி கிடாஆடுகள் 85 செ।மி। உயரம் 75 நீளம் இருக்கும்। சராசரியாக 50 கிலோ உடல் எடை இருக்கும்। பெண் ஆடுகள் 80 செ।மி.உயரம், 60।செ।மி.நீளம் சராசரியாக 35 கிலோ உடல் எடை கொண்டதாகக் காணப்படும்। வறட்சி பகுதியில் வாழ வல்லமை பெற்றவை।இவ்வகை ஆடுகள் பொதுவாக இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈனும் அரிதாக நான்கு, ஐந்து குட்டிகள் கூட ஈனும்।

கொடி ஆடுகள்:
மிக உயரமாக வளரக்கூடிய ஆடுகள்। இவை போரை ஆடு என அழைப்பதுமுண்டு।நீண்ட கழுத்தும், உயர்ந்த கால்களும் கொண்டதும், மெலிந்த உடலமைப்பு உடையதாகவும் இருக்கும்। ஆண், பெண் இரண்டுக்கும் கொம்பு இருக்கும்। வெள்ளை நிறத்தில் கறுப்பு புள்ளிகள் நிறைந்து காணப்பட்டால் அவை கரும்போரை என்றும், வெள்ள நிறத்தில் செந்நிறப் புள்ளிகள் நிறைந்து காணப்பட்டால் அவை செம்போரை என்று அழைக்கப்படும்।100செ।மீ உயரம், 85செ।மீ நீளமிருக்கும் கிடாக்களின் எடை40கிலோ இருந்து75 கிலோ வரை இருக்கும்। பெண் ஆடுகள் 80செமீ உயரம், 70செமீ நீளம் இருக்கும்।சராசரி எடை 35கிலோ இருக்கும்।வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் ஈனும்। மிக அரிதாக முன்று குட்டிகள் ஈனும்।
இந்த வகை ஆடுகள் தென் மாவட்டங்களில் காணப்படும்।குறிப்பாக கடற்கரை மாவட்டங்களில் அதிகமாக காணப்படும்।உயரமான கால்களை கொண்டிருப்பதால் நீண்ட தூரம் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லலாம்।உடலின் நிறம் கடும் வெப்பத்தையும் தாங்கும்।இந்த வகை போரை ஆடுகள் திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படுகின்றன।மற்றபடி, தாஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களில் ஓர் சில இடங்களில் இவை காணப்படுகின்றன।
எந்த வகையிலும் கலப்பு செய்யப்படாத கொடி ஆடுகள் எட்டயபுரம், கோவில்பட்டி, புதூர், வேம்பாறு, நாகலாபுரம் பகுதிகளில் கிடைக்கும்। இந்த பகுதிகளில் காணப்படும் 90சதவிகிதம் வெள்ளாடுகள் கொடிஆடுகள் எனப்படும் போரை ஆடுகள்தான்।
வறட்சியை தாங்கி வளரக்கூடியது। வறட்சி மிக்கப் பகுதிகளில் சிரு மரங்கள் குத்துச் செடிகளின் மேல் முன்காலைத் தூக்கிப் போட்டு நிமிர்ந்து மேயும் போது, 7அடி உயரத்திலுள்ள த்ழையையும் தாவிப் பிடித்துவிடும்।வறட்சியின் காரண்மாகத் தரையில் தீவனம் இல்லாத சூழ்நிலையில் மரத்தின் இலை தழைகளை தீவனமாக் கொள்ளவே உயரமான கால்களும், நீண்ட கழுத்தும் இதற்கு உள்ளது।

சேலம் கறுப்பு:

இந்த வகை ஆடுகள் இன்னமும் காட்டுத் தன்மை போகாமல் இருக்கிறன। காட்டில் கூட்டமாக அலைந்து திரிந்து மேயவே ஏற்றவை। எந்த வகை ஆடுகளை வரை ஆடுகள் எனவும் குறிப்பிடுவார்கள்।எப்பொழுதும் 10முதல் 30ஆடுகள் என மந்தையகவே இருக்க விரும்பும்। பெயருக்கு ஏற்றது போல் உடல் முழுதும் கறுமை நிறம் கொண்டதாக இருக்கும்।கருமை நிறகொண்ட எல்ல ஆடுகளும் சேலம் கறுப்பாடு என கருதிவிட கூடாது। மெலிந்த உடலமைப்புக் கொண்டது।கொம்புகள் பின் நோக்கி வளைந்து இருக்கும்।இவ்வகை ஆடுகள் சேலம் மாவட்டம் ஓமலூர், மேச்சேரி பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றன।வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலை பகுதிகளிலும் அதனை ஒட்டிய மலை பகுதியிலும், திருவண்ணாமலை பகுதிலும் காணப்படுகின்றன।பொதுவாக ஒரு குட்டிதான் ஈனும், அரிதாக இரண்டு குட்டி ஈனும்।

பள்ளை ஆடு:
இதை சீனி ஆடு எனவும் அழைப்பதுண்டு। இவை மிக குட்டையான சிறிய இனம்। குட்டையான கால்களும், அகன்ற உடலமைப்பும் கொண்டவை। இந்த இன ஆடுகளுக்கு தனிப்பட்ட நிறம் கிடையாது। எல்லா நிறங்களிலும் காணப்படும்।குறிப்பாக கறுப்பு நிறத்திலும் அதனைச் சார்ந்த புள்ளி நிறத்திலும் காணப்படும்।இந்த வகை ஆடுகள் அதிக எண்ணிக்கையில் குட்டி ஈனும் ।ஓரே ஈத்தில் ஆறு, ஏழு குட்டிகள் கூட ஈனும்।பல ஈத்து ஆடுதான் பள்ளையாடு என்று அழைக்கப்பாடுவதாக கூறுவதுமுண்டு।

மேற்குறிபிட்ட நான்கு வகை ஆடுகள்தான் தமிழ் நாட்டில் காணப்படும் முக்கிய வெள்ளாட்டினமாகும்.

No comments:

Post a Comment